முன்பே நடந்த அமலா பால் 2வது திருமணம்! – வீடியோ
அமலாபாலுடன் திருமணம் செய்து கொண்டதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாவ்னிந்தர் சிங்.
இயக்குநர் விஜய்யை காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலாபால். பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
சில மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், தனது காதலர் குறித்த எந்தவொரு விவரத்தையுமே அமலாபால் வெளியிடவே இல்லை. இது குறித்த கேள்விக்குக் கூட “அது என் பெர்சனல் விஷயம்” என்று மட்டுமே பதிலளித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்குடன் அமலா பால் நெருக்கமாக இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் அமலா பாலும், பவ்னிந்தர் சிங்கும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியுள்ளன.
இதனிடையே புவனிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமலாபாலைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். அதனுடன் ‘Wedding Throwback’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இவர் மும்பையைச் சேர்ந்த பாடகர் என்று தகவல் வெளியானது.
இதன் மூலம் அமலா பால் 2வது திருமணம் செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் செய்து கொண்ட பின் இருவரும் முத்தமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த போட்டோக்களும் சமூக வலைதளத்தில் வைரலானது.
சில மாதங்களுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments are closed.