“படையப்பா 2 உறுதி! ரஜினிகாந்தின் ஓபன் டாக் – 25 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ரகசியங்கள் வெளியானது!”
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சொந்த தயாரிப்பில் வெளியான ‘படையப்பா’ படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த ரீ ரிலீஸை முன்னிட்டு, ரசிகர்களுக்காக ரஜினி 36 நிமிடங்கள் நீளமான சிறப்பு ஓபன் டாக் ஒன்றை பதிவு செய்து, படத்தின் உருவாக்கத்தில் நடந்த பல தெரியாத உண்மைகளை பகிர்ந்துள்ளார்.
ரஜினி கூறியதாவது – “படையப்பா படத்தை எந்த OTT-க்கும் கொடுக்கவில்லை. சாட்டிலைட் உரிமையும் விற்கவில்லை. சன் டிவிக்கு இரண்டு முறை மட்டும் கொடுத்தேன். இந்த டிசம்பர் 12-ம் தேதி 25 ஆண்டுகளுக்குப் பிறகு படையப்பாவை பெரிய திரையில் பார்த்து மகிழுங்கள்” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா ராய் முதல் ரம்யா கிருஷ்ணன் வரை – நீலாம்பரிக்கான தேடல்
பொன்னியின் செல்வன் நந்தினியைப் படித்தவுடன் அதிலிருந்து பிரேரணை பெற்று உருவான கதையே ‘படையப்பா’ என ரஜினி கூறியுள்ளார்.
- முதலில் நீலாம்பரி வேடத்திற்கு ஐஸ்வர்யா ராயை தேர்வு செய்ய முயன்றதாகவும்
- மூன்று மாதம் அவரின் கால்ஷீட்டுக்காக காத்திருந்ததாகவும்
- ஆனால் அவர் சம்மதிக்காததால் வேறு நடிகையைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
பின்னர் கே.எஸ். ரவிக்குமார் ரம்யா கிருஷ்ணனைக் பரிந்துரைத்தபோது, “அரை மனசோடு ஒத்துக்கொண்டேன். ஆனால் செட்டில் அவர் நடித்ததைப் பார்த்த பிறகு—இந்த கதாபாத்திரத்துக்கு இவரைத் தவிர வேறு யாரும் பொருந்த மாட்டார்கள் என உணர்ந்தேன்” என்று ரஜினி கூறினார்.
சிவாஜி கணேசன் கேட்ட சம்பளம்… ரஜினியின் மனப்பூர்வ முடிவு
‘படையப்பா’ படத்தை மிகப் பிரமாண்டமாக உருவாக்க எடுத்து கொண்ட தீர்மானத்தை ரஜினி நினைவுகூர்ந்தார்.
அப்பா வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்த ரஜினிக்கு,
சிவாஜி அதிக சம்பளம் கேட்டதாக கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்தாராம். அதற்கு ரஜினி:
“இந்த படத்துக்கு அவர் தான் சரியானவர்! எவ்வளவு கேட்டாலும் கொடுங்கள்,”
என்று சொல்லி சிவாஜியை ஒப்பந்தம் செய்தார்.
படப்பிடிப்பு தளத்தில், “நீ இறந்தால் நான் உன் உடலுடன் வருவேன்” என்று உரிமையோடு கேட்ட சம்பவத்தையும் ரஜினி உணர்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
படையப்பா 2 வருது – ரஜினி ஓபன் கன்ஃபர்மேஷன்!
படையப்பாவின் கிளைமாக்ஸில் நீலாம்பரி சொல்வது:
“எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உன்னை பழிவாங்காம விடமாட்டேன்!”
இந்த வரியையே பயன்படுத்தி படையப்பா 2 கதை ரெடி என ரஜினிகாந்த் அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
“எல்லாம் சரியாக அமைந்தால் படையப்பா 2 கண்டிப்பாக வரும்,”
என்று அவர் கூறியதும் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் – வசூல் ரேஸ் ஆரம்பம்!
‘படையப்பா’ ரீ ரிலீஸை வெளிநாடுகளில் ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது.
‘கில்லி’ ரீ ரிலீஸ் வசூலை ‘படையப்பா’ கடக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
