திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு – தமிழ் திரையுலகத்தின் பெரும் இழப்பு
தமிழ் திரைப்படத் துறையின் முன்னோடியும், ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளருமான தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று வியாழக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் மூன்றாவது தளத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

ஏவிஎம் நிறுவன founder ஆன ஏவி மெய்யப்ப செட்டியாரின் பின், சரவணன் நிறுவத்தை திறம்பட முன்னெடுத்து பல தலைமுறை நடிகர்களின் படங்களைத் தயாரித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை உருவாக்கினார்.

‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘மின்சார கனவு’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘அயன்’ போன்ற ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களும், பல சின்னத்திரை தொடர்களும் அவரது தயாரிப்பில் வெளிவந்தவை.
தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருதும், புதுச்சேரி அரசின் ‘சிகரம்’ விருதும் உட்பட பல பெருமைகளைக் பெற்றவர் சரவணன். வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவர் சிகிச்சையில் இருந்தார். ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த அவர் இன்று அதிகாலை 5 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அவரது உடல் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஏவிஎம் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
