பெரும்பான்மையுடன் ஆட்சி அமைகிறது திமுக!
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில், 160க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அ.தி.மு.க., கூட்டணி 60க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றார் நம்மை எல்லாம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள். ‘ஜனநாயகத்தில் ஜனங்களே எஜமானர்கள்’ என்றார் நமக்கு எல்லாம் உணர்ச்சியை ஊட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்.
தமிழ்மொழிக்கும் – இனத்துக்கும் – நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 6வது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Comments are closed.