எடப்பாடியில் பழனிசாமி; போடியில் பன்னீர்செல்வம் போட்டி
சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட கட்சி தலைமை அலுவலகத்தில் பிப்.,24ல் விருப்ப மனு விநியோகம் துவங்கியது. நேற்று முன்தினம்(மார்ச் 3) வரை 8,200 விருப்ப மனுக்கள் பெறப்பட்ட. நேற்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க., சார்பில், இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையவில்லை.
இந்நிலையில், முதல்கட்டமாக, 6 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்துள்ளது.
இதன்படி விவரம் வருமாறு:
1.போடி- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
- எடப்பாடி- முதல்வர் பழனிசாமி
- ராயபுரம்- அமைச்சர் ஜெயக்குமார்
- விழுப்புரம்- அமைச்சர் சண்முகம்
- ஸ்ரீவைகுண்டம்-எம்பி சண்முகநாதன்
- நிலக்கோட்டை(தனி)- தேன்மொழி
ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 4 தென் மாவட்டங்களிலும், 2 வட மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகளாகவும் உள்ளன.
Comments are closed.