திமுக கூட்டணி: விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது.
2011 சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 இடங்களில் போட்டியிட்டது. இந்தமுறையும் 10 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்பியது.
இந்நிலையில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு இழுபறி தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு சென்னை அசோக்நகர் அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் விசிக உறுதியானது, திமுக கூட்டணியில் 6 தொகுதிக்கு விசிக தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டார்.
சிறுத்தைகளுக்கு 2 தனி தொகுதி, 4 பொது தொகுதி உறுதியாகியுள்ளது.
Comments are closed.