இந்தியாவில் கொரோனா பலி 10 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சீனாவில் 3,144 பேரும், இரானில் 1,556 பேரும், ஸ்பெயினில் 1,720 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 65 வயதுடைய நபர் ஒருவர் மும்பை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



Comments are closed.

https://newstamil.in/