விஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம் – மாஸ்டர் அப்டேட்!

விஜய்சேதுபதி விஜய்க்கு முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு அதனுடன் மாஸ்டர் பட அப்டேட்டையும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்க்கு தனது ஸ்டைலில் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தாக கூறி சில தகவல்கள் வெளியானது.

இதனிடையே சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. அப்போது நடிகர் விஜய் சேதுபதி கலை இயக்குநர் சதீஷ் குமாருக்கு வாழ்த்துச் சொல்லி கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விஜய் தனக்கும் ஒரு முத்தம் வேண்டும் என்று விஜய் சேதுபதியிடம் கேட்க, அவருக்கு அன்பு முத்தமிட்டார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு முடியும் தருணத்தில் விஜய்க்கு, விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.



Comments are closed.

https://newstamil.in/