Thursday, September 10, 2026
LatestNEWS

பாஜக பேரணியில் பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு போலீசிடம் மனு!

திருப்பூரில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் நாளை பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரணியின் போது தங்களின் பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு தர கோரி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் புகார் மனு அளிக்க வந்தனர்.

ஆனால் புகார் மனு அளிக்காமல் போலீஸ் ஸ்டேஷன் முன்பு நின்று போஸ் கொடுத்துவிட்டு, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.

கோவையில் கடந்தாண்டு கொல்லப்பட்ட சசிகுமார் இந்து முன்னணி பொறுப்பாளரின் இறுதி ஊர்வலத்தின்போது கடைவீதிகளில் இருந்த பிரியாணி அண்டாவை திருடி சென்றனர். இது போன்ற சம்பவம் தங்களுக்கும் நேரக்கூடாது என மனு அளிக்க வந்ததாக கூறியவர்கள், ஏன் புகார் மனு அளிக்காமல் சென்றனர் என தெரியவில்லை.



Comments are closed.