ரஜினியின் தர்பார் படத்துக்கு தடை?

நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு தர்பார் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரிய மலேசியா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் லைகா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திடம் இருந்து, மலேசிய விநியோக உரிமையை 20 கோடி ரூபாய்க்கு பெற்றதாக தெரிவித்துள்ளது.

2.0 படத்தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைகா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை தங்களுக்கு லைகா நிறுவனம் வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், ஜனவரி 2-ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.



Comments are closed.

https://newstamil.in/