Thursday, September 10, 2026
LatestNEWS

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு – நீதிமன்றம் தீர்ப்பு

கோவையில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம், பன்னிமடையில் ஏழு வயது சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறை, தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவரை கைது செய்தது. கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று காலை, சந்தோஷ் குமார் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ராதிகா அளித்த தீர்ப்பு: இந்த வழக்கில் சந்தோஷ்குமார் குற்றவாளி. அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், கொலை செய்ததற்காக 302 பிரிவின் கீழ், தூக்கு தண்டனையும், தடயங்களை அழித்ததற்காக 201 பிரிவின் கீழ், 7 ஆண்டுகள் சிறையும் தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும், சிறுமியின் தாயார் அளித்த மனுவில் மற்றொருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளதால், மறுவிசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.


Comments are closed.