‘சைக்கோ’ ட்ரெய்லர் ரிலீஸ் – வீடியோ!
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது ‘சைக்கோ‘ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அதில் கொடூரமாக கொலைகளை செய்யும் சைக்கோ, பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக தோன்றியிருக்கும் உதயநிதி உள்ளிட்ட எந்தக் கதாபாத்திரமும் வசனங்கள் பேசவில்லை. ட்ரெய்லர் முழுக்க பின்னணி இசை மூலம் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.
இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். அவருடன் இயக்குநர் ராம், நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Comments are closed.