திருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
மதுரையை 2வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ வலியுறுத்திய நிலையில் புதிய கோரிக்கையாக, திருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்றும் எம்.ஜி.ஆரின் கனவு திட்டத்தை நிறைவேற்றுவது தான் சரியாக இருக்கும் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், எம்ஜிஆரின் கனவு திட்டம் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்பது தான். அவரது கனவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை முதல்வர், துணை முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.
சர்வதேச விமான நிலையம் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் குடிநீர்த் தேவைகள் மிகுந்த நகரமாக உள்ளது, திருச்சி மாவட்டம் என்பதை எம்ஜிஆர் திருச்சி இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இரண்டாவது தலைநகரம் அமைய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தால் திருச்சி மாவட்டத்தை அறிவித்து எம்.ஜி.ஆர் அவர்களின் கனவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துவோம்“ என்றுள்ளார்.
Comments are closed.