முதல் முறையாக சிஏஏ குறித்து ரஜினி பேச்சு
இந்திய இஸ்லாமியர்களை வெளியேற்றும் நிலை வந்தால் முதலில் குரல் கொடுப்பேன், இஸ்லாமியர்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக பீதி கிளப்பப்பட்டுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக குடியுரிமை சட்டத்தை பயன்படுத்துகின்றன, மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது. அது நடத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படவேண்டும் ரஜினிகாந்த், சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தனது கருத்தை தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டம் பற்றி எதிர்கட்சிகள் தேவையற்ற பீதியை கிளப்பி உள்ளனர் என்றார்.
Comments are closed.