நியூசிலாந்து vs இந்திய – தொடரும் விராட் கோலி மோசமான ஆட்டம்!

நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் விராட் கோலி மூன்று ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார். கேப்டன் விராட் கோலி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சவுத்தியின் பந்துவீச்சில் மீண்டும் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

இதுவரை அதிகபட்சமாக 10 முறை விராட் கோலியின் விக்கெட்டை அவர் வீழ்த்தியுள்ளார்.

சமீபகாலமாகவே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆட்டம் கவலைக் கொள்ளும் விதத்தில் உள்ளது.

நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில், கோஹ்லி வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதுவரை நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில், இந்திய கேப்டன் ஒரு முறை ஐம்பது ரன்களைக் கடந்தார். ஒருநாள் தொடரில், கோஹ்லி வெறும் 75 ரன்களை பதிவு செய்துள்ளார், டி 20 ஐ காலில், கேப்டன் நான்கு போட்டிகளில் இருந்து 105 ரன்கள் எடுத்தார்.

அவர் கடைசியாக விளையாடிய 5 சர்வதேச போட்டிகளில் 3, 19, 2, 9, 15 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறார். விராட் கோலி மோசமான ஆட்டமும் ஒருநாள் தொடரை இந்திய அணி இழப்பதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

இந்திய அணிக்கு ஒன் மேன் ஆர்மியாக இருந்து பல வெற்றிகளை குவித்து தந்தவர் கேப்டன் விராட் கோலி. ஆனால், அவரது தற்போதைய பார்ம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது



Comments are closed.

https://newstamil.in/