தோனியின் சகாப்தம் முடிவடைகிறதா?
இந்தாண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா, முன்னாள் கேப்டன் தோனி, கோலி ஆகியோருடன் சாதனை பட்டியலில் இணைந்தார்.
இந்நிலையில் பிசிசிஐயின் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம் பெறவில்லை.
வருடாந்திர (அக்டோபர் 2019 – செப்டம்பர் 2020) இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் ஏ பிளஸ் பட்டியலில் உள்ளவர்களுக்கு 7 கோடி, ஏ கிரேடு பட்டியலில் உள்ளவரகளுக்கு 5 கோடி, பி கிரேடு பட்டியலில் உள்ளவர்களுக்கு 3 கோடி, சி கிரேடு பட்டியலில் உள்ளவர்களுக்கு 1 கோடி என்பன முறையே தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-20க்கான பி.சி.சி.ஐ மத்திய ஒப்பந்தங்கள்
தரம் ஏ + (Rs. 7 cr): விராட் கோலி ரோஹித் சர்மா ஜஸ்பிரீத் பும்ரா
தரம் ஏ (Rs. 5 கோடி): ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், மொஹமட். ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷாப் பந்த்
தரம் பி ( Rs. 3 கோடி): விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஹார்டிக் பாண்ட்யா, மாயங்க் அகர்வால்
கிரேடு சி (Rs. 1 கோடி): கேதார் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், மனிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, ஷார்துல் தாக்கூர், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர்
தோனி தனது எதிர்காலம் குறித்து இறுக்கமாக இருந்தபோதும், ஜனவரி (2020) இல் சாத்தியமான தெளிவு குறித்து சுட்டிக்காட்டிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் , டி 20 உலகக் கோப்பையில் தோனியின் பங்கேற்புக்கான வாய்ப்புகள் அவரது செயல்திறனுக்கு உட்பட்டவை என்று கூறினார்.
Comments are closed.