வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9, 2026
Latest

By-Election Results LIVE | மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் – யார் முன்னிலை?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், இரு தொகுதிகளிலும் எந்தக் கட்சி வெற்றி பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முன்னிலை பெற்றுள்ள நிலையில், தாராபுரத்தில் தவெக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நேரலை உடனுக்குடன் (LIVE UPDATES)

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் 2026:

முன்னிலை நிலவரம்


காலை 10:30 மணி | அக். 9, 2026

அண்மைத் தகவல்

 மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை

தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்- 20,163 வாக்குகள் திமுக வேட்பாளர் பரந்தாமன்- 13,856 வாக்குகள் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்- 11,488 வாக்குகள் நாம் தமிழர் வேட்பாளர் ஜானகி ராமன்- 332 வாக்குகள் இடதுசாரி வேட்பாளர் சுகந்தி- 152 வாக்குகள்


காலை 10:20 மணி | அக். 9, 2026

அண்மைத் தகவல்

 தாராபுரத்தில் 4வது சுற்று முடிவில்

அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதிமுக வேட்பாளர் பானுமதி 10,773 வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். தவெக வேட்பாளர் சத்தியபாமா 9815 வாக்குகளை பெற்று 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


காலை 10:15 மணி | அக். 9, 2026

அண்மைத் தகவல்

 தாராபுரம் அதிமுக தொடர்ந்து முன்னிலை

Dharapuram by election result


காலை 10:10 மணி | அக். 9, 2026

அண்மைத் தகவல்

 மதுராந்தகம் 4வது சுற்று.. தவெக தொடர்ந்து முன்னிலை .. 2வது இடத்தில் திமுக

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் - யார் முன்னிலை?

காலை 10:00 மணி | அக். 9, 2026

அண்மைத் தகவல்

 மதுராந்தகம் 4வது சுற்று.. தவெக முன்னிலை.. 2வது இடத்தில் திமுக

மதுராந்தகத்தில் 4வது சுற்றிலும் தவெக முன்னிலை வகிக்கிறது. மதுராந்தகத்தில் தவெக 11,859 வாக்குகளும், திமுக 8862 வாக்குகளும், அதிமுக 6759 வாக்குகளும் பெற்றுள்ளன.


காலை 9:45 மணி | அக். 9, 2026

 தாராபுரம் இடைத்தேர்தல் 3வது சுற்று.. அதிமுக முன்னிலை

தாராபுரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை விவரம்: அதிமுக வேட்பாளர் பானுமதி- 8212 வாக்குகள், தவெக வேட்பாளர் சத்தியபாமா- 7615 வாக்குகள், திமுக வேட்பாளர் சுகன்யா- 6035 வாக்குகள், நாம் தமிழர் கட்சி கார்த்திகா- 520 வாக்குகள், இடதுசாரிகள் லட்சுமணன்- 177 வாக்குகள்


காலை 9:30 மணி | அக். 9, 2026

 மதுராந்தகம் இடைத்தேர்தல் 2வது சுற்று.. தவெக முன்னிலை

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக 3827 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அடுத்தபடியாக திமுக 3395 வாக்குகளும், அதிமுக 2223 வாக்குகளும் பெற்றுள்ளது.


காலை 9:25 மணி | அக். 9, 2026

 தாராபுரத்தில் அதிமுக முன்னிலை

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக 3827 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அடுத்தபடியாக திமுக 3395 வாக்குகளும், அதிமுக 2223 வாக்குகளும் பெற்றுள்ளது.


காலை 9:10 மணி | அக். 9, 2026

தாராபுரம் இடைத்தேர்தல் – 1350 வாக்குகளுடன் தவெக முன்னிலை.

தாராபுரம் இடைத்தேர்தலில் முதல் சுற்று முடிவில் தவெக 1350 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், திமுக 870 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்திலும் உள்ளது. அதே போல அதிமுக 643 வாக்குகளும், சிபிஐ 9 வாக்குகளும், நாம் தமிழர் 6 வாக்குகளும் பெற்றுள்ளது.