குரங்கு அம்மை – கொரோனவை போல் வேகமாக பரவுமா? குரங்கு அம்மை அறிகுறிகள்!

குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது பாதிக்கப்பட்ட நபர்களுடனும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடனும் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது.

உலக அளவில் மீண்டும் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த அச்சம் எழுந்திருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலையை அறிவித்திருக்கிறது. கொரோனா தொற்றின் கொடூரமான தாக்கத்திலிருந்து உலக மக்கள் இப்போதுதான் சற்று மீண்டும் வந்துள்ளார்கள். ஆனால் அதன் பின்னர் அவ்வப்போது பல வைரஸ் தொற்றுகள் தங்கள் கோர முகத்தை காட்டி அச்சுறுத்தியுள்ளன. இப்போது அந்த வரிசையில் மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மையும் மக்களிடையே பீதியை கிளப்பி வருகிறது. மீண்டும் குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது.

குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது பாதிக்கப்பட்ட நபர்களுடனும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடனும் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. எனினும் இது ஒரு புதிய நோய் அல்ல. 1958 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாக இதனால் டென்மார்க்கில் ஒருவர் பாதிக்கப்பட்டார்.

ஆனால் சமீபகாலங்களில் இந்த வைரஸ் காங்கோவில் பரவத் தொடங்கிய பாதிப்பில் தற்போது மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி இருக்கிறது. இதுவரை 16,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். தற்போது ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

குரங்கு அம்மை வைரஸின் அறிகுறிகள் (Symptoms of Monkeypox)

  • உடலில் சீழ் நிறைந்த கொப்புளங்கள்
  • காய்ச்சல்
  • தலைவலி
  • தசைகளில் வலி
  • முதுகு வலி
  • பலவீனம்
  • தொண்டையில் வீக்கம்

தற்போது வரை, குரங்கு அம்மை காய்ச்சலுக்கு தடுப்பூசி எதுவும் இல்லை. இதனால், இதை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. இருப்பினும், குரங்கு அம்மை அறிகுறிகள் தோன்றினால், அந்த நோயாளிக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையைத் தொடங்குவது குணமடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் நாட்டினர் நாட்டிற்குள் வரும்போது சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் குரங்கு அம்மை வைரஸ் மற்றும் பாதிப்பை கண்டறிவதற்காக ஆய்வகங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

குரங்கு பாதிப்பு குறித்த அச்சம் மற்றும் அதனை எதிர்கொள்வது குறித்து உயர்நிலைக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் குரங்கு அம்மை பாதிப்பு குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கண்காணிப்பு மற்றும் அதனை வேகமாக கண்டறிவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த அச்சம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கண்காணித்து வரும் நிலையில் இந்தியாவில் பாதிப்பு இல்லை என்றாலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இருக்கும் சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விஆர்டிஎஸ் ஆய்வகங்கள் இருக்கும் நிலையில் அதில் சுமார் 30 ஆய்வகங்களில் மட்டுமே குரங்கம்மை வைரஸை கண்டுபிடிப்பதற்கான வசதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

குரங்கு அம்மையை தவிர்ப்பதாற்கான வழிகள்

  • குரங்கு அம்மையைத் தவிர்ப்பதற்கான மிக முக்கியமான விஷயம், விலங்குகளுடன் பாதுகாப்பற்ற தொடர்பைத் தவிர்ப்பது என உலக சுகாதார அமைப்பான WHO பரிந்துரைக்கிறது.
  • நோய்வாய்ப்பட்ட மற்றும் இறந்த விலங்குகளை பாதுகாப்பின்றி தொடுவதையும் அவற்றின் இறைச்சியை உண்பதையும் தவிர்க்க வேண்டும்.
  • இது தவிர, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம்.
  • பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டாம்.
  • உடல் உறவில் ஈடுபடும்போது பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


https://newstamil.in/