2019ல் உச்சத்தில் தங்கம்; பவுனுக்கு ரூ.5,768 உயர்வு

2020 புத்தாண்டு தினமான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

சர்வதேச நிலவரங்களை பொறுத்து உள்நாட்டில் தங்கத்திற்கு தினமும் காலை மாலை என இரு வேளைகளில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாலை நிலவரமே அன்றைய தின விலையாகக் கருதப்படுகிறது.

முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்ததால் நேற்று கிராம் தங்கம் 3,742 ரூபாய்க்கும்; பவுன் 29 ஆயிரத்து 936 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.3,735 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50.30 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

2019ல் ஓராண்டில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 721 ரூபாய் உயர்ந்து 3,742 ரூபாயாக அதிகரித்துள்ளது. பவுனுக்கு 5768 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 936 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 2019 செப்டம்பர் 4ம் தேதி பவுன் தங்கம் விலை முதல் முறையாக 30 ஆயிரம் ரூபாயை தாண்டி புதிய சாதனை படைத்தது. அதன்படி அன்று காலை 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 3765 ரூபாய்க்கும்; பவுன் 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனையாகின.

அன்று மாலை கிராம் தங்கம் 3741 ரூபாயாகவும்; பவுன் 29 ஆயிரத்து 928 ரூபாயாகவும் குறைந்தன. இதுவே தங்கம் விற்பனையில் உச்ச விலையாகும்.



Comments are closed.

https://newstamil.in/