தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 25 இடங்கள் ஒதுக்கீடு

வரும் சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றன. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பா.ம.கவுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவுசெய்துள்ளது. பா.ம.கவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. பா.ஜ.கவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது

வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. குறைந்த தொகுதிகளை ஒதுக்க தி.மு.க., முன்வந்ததால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்டு வந்தது.

இந்நிலையில், இன்று இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், காங்கிரசுக்கு 25 சட்டசபை தொகுதிகள், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், திமுக சார்பில் ஸ்டாலினும், காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரியும் கையெழுத்து போட்டனர்.



Comments are closed.

https://newstamil.in/