சென்னையில் கொரோனா வைரஸ் கண்டறியும் ஆய்வகம்; சீனாவில் பலி 213 ஆக உயர்வு!
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில், சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது. மேலும் 9,692 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனா தவிர்த்து 18 உலக நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகனப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் ஆய்வகம் சென்னையில் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிய தகவல் வந்ததில் இருந்தே தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
Comments are closed.