வருமான வரி குறைப்பு: நடுத்தர வகுப்பினர் வரவேற்பு

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டின் போது வருமான வரி உச்சவரம்பு குறைக்கப்படுமா என்று நடுத்தர வகுப்பினர் எதிர்பார்ப்பதும், விவாதிப்பதும் வழக்கம்.

தனி நபர் வருமான வரியில் நிறைய சலுகைகள் தரப்படுகின்றன, வருமான வரி மேலும் குறைக்கப்படும்.

  • ரூ.5 – ரூ.7.5 லட்சம் வருமானம் பெறுவோரின் வருமான வரி 10 சதவீதம் குறைக்கப்படும்.
  • ரூ.7.5 – 10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 15 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.
  • ரூ.10 – 12.5 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 20 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.
  • ரூ.12.5 – 15 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 25 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.
  • ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்க 30 சதவீதம் வரி தொடரும்.
  • ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது.

ஏற்கனவே, மாத சம்பளம் பெறும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்தி வந்தனர்.

இந்த புதிய அறிவிப்பால் அவர்களது சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.



Comments are closed.

https://newstamil.in/