ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாக உருவாகியுள்ள தர்பார் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தர்பார் படத்தின் ட்ரெய்லர் நாளை (16.12.2019) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் தர்பார் படத்தினை வட இந்தியாவில் ரிலீஸ் செய்யும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது என அறிவிப்பு வந்துள்ளது.
ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.