நடிகர்கள் விமல், சூரி மீது வழக்குப்பதிவு! கைதாக வாய்ப்பு!

கொடைக்கானலின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரிக்கு கடந்த 15-ம் தேதி நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் சென்றனர். அங்கு அவர்கள் மீன் பிடித்ததுடன், அந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதையடுத்து, அவர்களுக்கு இபாஸ் கிடைத்தது எப்படி, வனத்துறையினர் எப்படி இவர்களை வனப்பகுதியில் அனுமதித்தனர் என்பது போன்ற பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.

இதனையடுத்து, சூரி, விமல் ஆகியோர் சென்றபோது பணியில் இருந்த வனக்காவலர்கள் இருவர் மற்றும் வனக்காப்பாளர் ஒருவரை பணியிட மாற்றம் செய்துள்ளதாக மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விமல், சூரி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர், அதாவுது இவர்கள் இபாஸ் பெறாமல் கொடைக்கானல் சென்றுள்ளனர். விமல், சூரி மீது ஊரடங்கு விதிமுறை மீறியது தொற்று பரவ காரணமாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.



Comments are closed.

https://newstamil.in/