தீயாய் பரவும் வீடியோ – சுச்சி லீக்ஸ் சுசித்ராவின் அடுத்த அதிரடி!

வானொலி தொகுப்பாளினியாக பயணத்தைத் துவங்கிய சுசித்ரா, பின்னர் தமன்னா, ஸ்ரேயா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலருக்கும் படங்களில் பின்னணி குரல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து பாடகியாக அவதாரமெடுத்த அவர் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா உள்ளிட்டோரின் இசையமைப்பில் பல ஹிட் பாடல்களையும் பாடினார்.

‘சுச்சி லீக்ஸ்’ என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் தீயாகப் பரவின. மன அழுத்தம் காரணமாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்த சுசித்ரா, சிங்கிள் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சுச்சி இஸ் லைப் எனப்படும் யு-டியூப் பக்கத்தில் சுசித்ரா பாடி, நடித்துள்ள I Dont kno பாடலை வெளியிட்டுள்ளார்.

தனது நண்பர் ரஞ்சித் உடன் இணைந்து சுசித்ரா பாடியுள்ள அந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மீண்டும் சினிமாவிற்கு கம்பேக் கொடுக்க உள்ளதை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார் சுசித்ரா.



Comments are closed.

https://newstamil.in/