சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷல் டாக்டர் ஃபர்ஸ்ட் லுக்
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நெல்சன் திலீப் குமார் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நாயகியாக பிரியங்கா நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் தோன்றுகின்றனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் டாக்டர் பட ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு இன்று காலை 11.03 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடைசியில் பார்த்தால் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நாளை காலை 11.03 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.
Comments are closed.