ஷாருக்கானின் கல்லூரி மார்க் ஷீட் வைரல் – பாலிவுட் பாட்ஷாவின் மதிப்பெண்கள் ரசிகர்கள் ஆச்சரியம்!
பாலிவுட்டை அசத்தி வரும் நடிகர் ஷாருக்கான், ரசிகர்களால் “பாலிவுட் பாட்ஷா” என பெருமையாக அழைக்கப்படுகிறார்.
இவர் நடித்த பதான், ஜவான், டங்கி என மூன்று மிகப்பெரிய திரைப்படங்கள் ஒரே ஆண்டில் திரையரங்கில் வெளியாகி சாதனை படைத்தது. இதில் பதான் மற்றும் ஜவான் உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை கலக்கியது.
இதே நேரத்தில், தனது மகளுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க ஷாருக்கான் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஷாருக்கானின் கல்லூரி காலத்தில் எடுத்ததாக கூறப்படும் மார்க் ஷீட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த மதிப்பெண்களில், கணக்கில் 78, ஆங்கிலத்தில் 51, மேலும் Electronics பாடத்தில் 92 மதிப்பெண்கள் எடுத்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
