கந்து வட்டி ரஜினி – ரஜினிகாந்த் வட்டித் தொழிலில் ஈடுபட்டாரா?
கந்துவட்டிரஜினி என்று சமூக வலைதளத்திங்ல டிரண்டிங் செய்து வருகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்திற்கு எதிரான வருமான வரி ஏய்ப்பு வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் வாபஸ் பெறப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமான வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் மீதான மேல்நடவடிக்கையை கைவிடப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
வருமானவரித் துறை தாக்கல் செய்த மனுவில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, 2002-03-ம் நிதியாண்டில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கியதாகவும், இதற்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வட்டி பெற்றதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், நிகர வருமானமான ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு வரி செலுத்திவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு 18 சதவீத வட்டியில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் வழங்கியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதேபோல, அர்ஜுன்லால், சசி பூஷண், சோனு பிரதாப் ஆகியோருக்கு 68 லட்சம் வழங்கியதாகவும், 2003-04-ம் நிதியாண்டில் முரளி பிரசாத் என்பவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2002 -2003 மற்றும் 2004 – 2005 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட நிதியாண்டில், ரஜினிகாந்த் சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததாகவும், அதற்கு கிடைத்த லாபத்துக்கு வரி செலுத்தி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரஜினிகாந்த் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், நான் சம்பாதித்த பணத்திற்கு வரி கட்டிவிட்டேன். இது நான் கடன் கொடுத்தது. அதிலும் நான் யாருக்கும் கடனை தொழிலாக கொடுக்கவில்லை. தெரிந்தவர்களுக்கு மட்டும் பணம் கொடுத்தேன். அதில் வட்டி வந்தது. இந்த வட்டிக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. இதை நான் தொழிலாக செய்யாத காரணத்தால் வரி கட்டவேண்டிய அவசியம் கிடையாது,
இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் வட்டிக்கு விட்ட விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , ரஜினி வட்டிக்கு பணம் கொடுத்த விவகாரம் சமூக வலைதளத்திங்ல டிரண்டிங் ஆகி வருகிறது. ட்விட்டரில் #கந்துவட்டிரஜினி என்று டிரண்டிங் செய்து வருகிறார்கள்.
Comments are closed.