தர்பார் ‘தந்தை-மகளாக வாழ்ந்து இருக்கிறோம்’ – ரஜினிகாந்த் பற்றி நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ் ஒரு திறமையான நடிகை என்பது ஒரு பெரிய ரகசியம் அல்ல. அவரது கனவு படமான தர்பார் நாளை வெளியாக இருக்கிறது, அவர் ரஜினிகாந்தின் மகளாக நடிக்கிறார்.
நிவேதா மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார், மேலும் அவரது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்க காத்திருக்கிறார்.
இந்த படத்தில் இவரது வள்ளி கதாபாத்திரம் மிக ரகசியமாக வைத்திருக்கிறார் இயக்குனர், நிவேதா தாமஸ் கதாபாத்திரம் மிக வலுவான ஒன்றாக வடிவமைக்க பட்டிருப்பதாக கூறப்படுகிறது
படத்தை பற்றி நிவேதா கூறும்போது “பாபனாசத்திற்குப் பிறகு, நான் எல்லாம் மொழிகளிலும் நல்ல கதைகளை தேடிக்கொண்டிருந்தேன் நிறைய வாய்ப்புகள் தமிழில் வந்தன, ஆனால் எதுவும் என்னை கவரவில்லை, திடீரென்று கிடைத்த வாய்ப்புதான் தான் தெலுங்கில் ‘நின்னு கோரி’ படம் அந்த படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது, எனக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன.
நான் ஒரு மாஸ் படம் செய்ய ஆர்வமாக இருந்தேன், எனவே ஜெய் லாவா குசா என்ற படம் செய்தேன், இது ஆந்திராவில் உள்ள ரசிகர்களை சென்றடைய எனக்கு உதவியது” என்றார் நிவேதா.
மேலும் அவர் கூறுகையில், “உங்களுக்கு தெரியுமா முதல் முறையாக நான் ரஜினி சார் பார்த்த போது அவர் மேக்கப் போட்டு கொண்டு இருந்தார், அவரை என் முதலில் பார்த்தபோது என் அப்பாவை போல் உணர்ந்தேன்.
நாங்கள் கிட்டத்தட்ட 45 நாட்கள் ஒன்றாகச் படப்பிடிப்பில் இருந்தோம், அவர் நடித்த கதாபாத்திரமாக மட்டுமே நான் அவரைப் பார்த்தேன், எனது அப்பா கடைசி நாள் படப்பிடிப்புக்கு வந்தார், ஆனால் ரஜினி சாருக்கு மகளாக நடித்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. அதன் பிறகு அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டேன், அப்பொழுது தான் நான் ஒரு சூப்பர்ஸ்டாருடன் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்”.
கமல் மற்றும் ரஜினிக்கு மகள் மற்றும் விஜய்க்கு சகோதரியாக நடித்த பிறகு, நீங்கள் கதாநாயகியாக உயர்ந்து விட்டீரா? என்ற கேள்விக்கு நல்ல கதை இருந்தால் யார் ஹீரோ என்று பார்க்காமல் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த ஒரு பெண் என்றாலும், தமிழில் சரளமாகப் பேசுகிறார், சென்னையில் குடியேறியதால் தனது படங்களுக்கான டப் செய்கிறேன்” என்றார் நிவேதா.
Comments are closed.