Sunday, September 13, 2026
ENTERTAINMENT

கார்த்தி மீண்டும் இரட்டை வேடம்

கார்த்தி தமிழ் திரையுலகில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தம்பி படத்தில் அண்ணி ஜோதிகாவுடன் நடித்தார் கார்த்தி. நல்ல விதமான விமர்சனங்களை பெற்ற அப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்நிலையில், சிறுத்தை, காஷ்மோரா படத்தை தொடர்ந்து இப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம் கார்த்தி என்று தகவல்கள் கசிந்துள்ளது.

2016ல் தான் நடித்த காஷ்மோரா படத்தில் இரண்டு வேடங்களில் நடித்த கார்த்தி, மித்ரன் படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.