புதன்கிழமை, செப்டம்பர் 30, 2026
ENTERTAINMENT

விஜய்யின் கடைசி படம் – கண்ணீரோடு வெளியே வருவாங்க ரசிகர்கள்? ‘ஜன நாயகன்’ கிளைமேக்ஸ் ரகசியம்!

“கண்ணீரோடு தான் ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியே வருவார்கள்” – இப்படியான வார்த்தைகள் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகின்றன. நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக ஜன நாயகன் மாறியிருப்பதே இதற்குக் காரணம்.

சினிமாவை விடைபெற்று முழுமையாக அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ள விஜய், ரூ.250 கோடி சம்பளத்தைக் கூட துறந்து மக்களுக்காக பணியாற்றத் தயாராக இருப்பதாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தது பெரும் கவனம் பெற்றது. இயக்குநராக அல்ல, எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த், விஜயகாந்த் போல நடிகராகவே உயர வேண்டும் என்ற கனவுடன் பயணித்த விஜய், அனைத்து விமர்சனங்களையும் கடந்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா & டிரைலர் அப்டேட்

ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா, கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஒரு லட்சம் ரசிகர்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரன் டைம் & கிளைமேக்ஸ் ரகசியம்

படத்தின் மொத்த ரன் டைம் 3 மணி நேரம் 5 நிமிடங்கள் என பேசப்பட்டாலும், உண்மையான கதைப்பகுதி சுமார் 2 மணி 45 நிமிடங்களே இருக்கும் என கூறப்படுகிறது. கிளைமேக்ஸ் முடிந்ததும், தளபதி விஜய்க்கு சிறப்பு ட்ரிப்யூட்டாக அவரது சினிமா வாழ்க்கையை நினைவுகூரும் காட்சிகள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுவே ரசிகர்கள் கண்ணீருடன் வெளியே வருவார்கள் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நட்சத்திர பட்டாளம் & இசை

கேவிஎன் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ‘தளபதி கச்சேரி’ பாடல் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

ரசிகர்களின் ஒரே கேள்வி – One Last Time!

ஜன நாயகன் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா? கதை என்ன? என்ற விவாதங்களை விட, “One Last Time” தளபதி விஜயை திரையில் பார்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஒரே ஆசை. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள ஜன நாயகன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு உணர்ச்சி நிறைந்த கொண்டாட்டமாக மாறும் என்பது உறுதி.