விபத்தில் சிக்கிய சுசீந்திரன்; கையில் எலும்பு முறிவு!
வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் இயக்கநர் ஆனவர் சுசீந்திரன். இன்று காலையில் நடைபயிற்சி சென்ற போது வாகனம் மோதியதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இடது கை எலும்பு முறிந்துள்ளதால் அதற்கு லேசர் சிகிச்சை செய்யப்பட உள்ளது. அவர் 3 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்களாம்.
சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’ என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.