அஜித்தின் 61-வது படத்தை இயக்குகிறாரா? கே.எஸ்.ரவிக்குமார் விளக்கம்!
அஜித்தின் 61-வது படத்தை இயக்குவதாக வந்த தகவல் குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்துவருகிறார். நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய வினோத் இயக்குகிறார். அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன.
நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு. மேலும் இத்திரைப்படத்தில் அஜித்துடன் நடிக்கும், நடிகர்கள் குறித்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் அஜித்தின் 61-வது படம் குறித்தும் தகவல்கல் வெளியாகின. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்குவதாக செய்திகள் வெளியாயின.
அதில், அஜித்தின் 61-வது படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும், ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், தனக்கு ட்விட்டரில் அக்கவுண்ட் இல்லை என்றும், எனது பெயரில் உள்ள போலி ட்விட்டர் ஐடிக்களில் இருந்து வரும் தகவல்கள் போலியானவை அதை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்த வில்லன், வரலாறு பிளாக்பஸ்டர் படங்கள் .
Comments are closed.