பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் காலமானார்
ரிஷி கபூர் தனது 67 வயதில் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார்.
பாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் நடிகர் ரிஷிகபூர். 1970 மற்றும் 80-களில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர்.
புற்றுநோயுடன் நீண்ட நாள் போராடினார். நடிகர் காலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை அவரது சகோதரர் ரந்தீர் கபூர் உறுதிப்படுத்தினார்.
இன்று காலை பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த நடிகர் ரிஷி கபூர் உடல்நலம் முடியாமல் இறந்துள்ளார். இது ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டுவிட்டரில் அமிதாப் பச்சன் இதை மனம் நொந்து கூறியுள்ளார்.
இவரது மறைவிற்கு திரைபிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ரிஷி கபூர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார்.
Comments are closed.