Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

“போதை பொருளை எனக்காக பயன்படுத்தியது உண்மை” – நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் –

நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டு உறுதியாக, அவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். ‘தீங்கரை’ திரைப்படத்தின் போது போதைப்பொருள் வாங்கிய தகவல் வெளியாகி, இது தொடர்பான விசாரணையில் பிரதீப் எனும் நபரிடம் இருந்து 40 முறை போதைப்பொருள் வாங்கியதும், ரூ.4.72 லட்சம் GPay மூலம் பரிமாற்றம் செய்ததும் தெரியவந்தது.

அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, நீதிபதி அவர் வரும் மாதம் 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஸ்ரீகாந்த், போதைப் பொருளை யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்றும், தனக்கே பயன்படுத்தியதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், வெளிநாடு செல்ல மாட்டேன், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என கூறி ஜாமீன் கோரியுள்ளார். ஆனால் நீதிபதி ஜாமீனை நிராகரித்து, போதை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்திய நிலையில், ஸ்ரீகாந்த் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.