வந்தாச்சு சட்டம் – பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்கு
தெலங்கானாவில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தூக்கு தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய சட்ட மசோதா ஒன்றை ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டுவந்துள்ளார்
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீதான வழக்குகள் ஒரு வாரத்திற்குள் விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படுபவர்களுக்கு 21 நாட்கள் அதாவது 3 வாரங்களுக்குள் தூக்கு தண்டனை வழங்க புதிய சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும் என்ற முக்கிய சரத்து பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே ஆந்திர பிரதேச திஷா சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சட்டம் இன்று ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்படும் போது ஆந்திரா மாநிலம் தான் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் முதல் மாநிலமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பெண்களுக்கு எதிராக சமூகவலைதளங்களில் பதிவிடுவோருக்கு தண்டனை, எந்த காவல்நிலையத்தில் வேண்டுமானாலும் புகார் செய்யும் ZERO FIR வசதி உள்ளிட்டவை இந்த புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
Comments are closed.