தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் உடல் அடக்கம்

திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் கடந்த 2-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் 62 வயதில் காலமானார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ., இவர் ஆவார்.

அன்பழகனின் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் உள்ள அவரது தந்தை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்ட இடமருகே, அடக்கம் செய்யப்பட்டது. மயானத்தில் வெளியே கூடியிருந்த திமுக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.



Comments are closed.

https://newstamil.in/