Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. நந்தன் இயக்கத்தில் அம்மனாக நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.

இப்படத்தை ஐசரி கே கணேஷ் அவர்களின் வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக ஆர்.ஜே. பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

எல்.கே.ஜி. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் நிறுவனம் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் மூக்குத்தி அம்மன் படம் உருவாகி வருகிறது.

ஆர்.ஜே பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து இப்படத்தின் First லூக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.


Comments are closed.