விஜயின் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தில்
லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வருகிறார். தற்போது நெய்வேலி என்எல்சியில் நடைபெறும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். டெல்லி, கர்நாடகா போன்ற இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு நடிகர் விஜயை காண பெரிய அளவில் ரசிகர்கள் கூடி வருகிறார்கள். அவரின் மற்ற படத்தை விட இந்த படத்தின் ஷூட்டிங்கை காண அதிக அளவில் மக்கள் கூடி உள்ளனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யிடம் விசாரணை நடத்தியதோடு அவரை சென்னைக்கு அழைத்து வந்ததால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது. விசாரணை முடிந்ததும் விஜய் உடனடியாக நெய்வேலிக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
ஓரிரு நாட்களில் அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார்கள். அதன்பிறகு விடுபட்ட சில காட்சிகளை சென்னையிலேயே படமாக்குகின்றனர். இந்த மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடைகிறது.
Comments are closed.