Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatestVIDEOS

சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து – வைரலான வீடியோ

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘பராசக்தி’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கைலாஷ் அருகே சென்றபோது, சிவகார்த்திகேயன் பயணித்த கார் முன்னால் சென்ற மற்றொரு காரின் மீது மோதியதால் லேசான விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவலர்கள் இரு கார்களையும் ஓரமாக நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது காரிலிருந்து வெளியே வந்த நடிகர் சிவகார்த்திகேயன், போக்குவரத்து காவலர்களுடன் அமைதியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

நல்வாய்ப்பாக, இந்த விபத்து லேசானதாக இருந்ததால் சிவகார்த்திகேயன் உட்பட யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. தற்போது சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி மற்றும் வெங்கட் பிரபு இயக்கும் படங்களிலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.