விஜய்யின் தவெக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை: 1 முதல்வர் + 2 துணை முதல்வர் டீல்? கேரளா–புதுச்சேரி–தமிழ்நாடு குறி!
தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்க முயற்சி செய்து வரும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தமிழகத்துடன் கேரளா மற்றும் புதுச்சேரியிலும் தேர்தலில் களம் இறங்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
காங்கிரஸுக்கு விஜய் சமர்ப்பித்ததாக கூறப்படும் ‘பார்முலா’
விஜயின் தவெக, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் நோக்கில் மிகப்பெரிய அரசியல் டீல் ஒன்றை முன்வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
அதன்படி:
தமிழ்நாடு
விஜய் – முதல்வர் வேட்பாளர்
100 இடங்களில் TVK போட்டியிடும்
காங்கிரஸ் – கூட்டணியில் தொடரும்
கேரளா
10 இடங்களில் TVK போட்டி
துணை முதல்வர் பதவி காங்கிரசுக்கு
புதுச்சேரி
5–10 தொகுதிகள்
துணை முதல்வர் பதவி காங்கிரசுக்கு விடுவிப்பு
இந்த டீல் குறித்து விஜய், டெல்லியில் காங்கிரஸ் உயர்நிலை தலைவர்களுடன் தீவிரமாக பேசி வருகிறார் என்பதும் தகவல்.
பிரவீன் சக்ரவர்த்தி – விஜய் மீட்டிங்
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி பரவீன் சக்ரவர்த்தி, விஜயை நேரில் சந்தித்து நீண்ட அரசியல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- கூட்டணி
- திமுக–காங்கிரஸ் உறவு
- தமிழக அரசியல் நிலைமை
இது போன்ற பல விஷயங்கள் இதில் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பிரவீன் சக்ரவர்த்தியின் ‘சர்ச்சையான’ போஸ்ட்
இரண்டு நாட்களுக்கு முன் சக்ரவர்த்தி விஜயை பாராட்டி ஒரு பதிவை இடுவது கூட்டணித் தகவல்களுக்கு மேலும் வலு சேர்த்தது.
அதில் அவர் கூறியது:
“இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் பேரணிகளில் கூட்டத்தை சேர்க்கப் பெரும் முயற்சி செய்கின்றன. ஆனால் TVK பேரணிகளில் மக்கள் அதிகம் வருவதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதே ஒரு சவால்… இது பலருக்கும் ஆச்சரியம்.”
இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
தவெக அடுத்த குறி?
இந்த மூன்று பிரதேசங்களிலும் ஒரே நேரத்தில் போட்டியிடுவது, TVK தேசிய அளவிலான விரிவாக்கத்திற்கு முன்னோடி முயற்சி எனக் கூறப்படுகிறது. காங்கிரஸுடனான இந்த சாத்திய கூட்டணி, தெற்கு இந்திய அரசியலில் புதுவித மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.
