3-வது நாளாக தங்கம் விலை குறைவு

கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.3,160 குறைந்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை வியாழக்கிழமை ஒரு சவரனுக்கு ரூ.480-ஆக திடீரென குறைந்தது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.54,600-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைந்தது.

செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,200 குறைந்து, புதன்கிழமை மீண்டும் ரூ.480 குறைந்து, ஒரு சவரனின் விலை ரூ.51,920-ஆக விற்பனையானது. இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.51,440-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.6,430-க்கும் விற்பனையாகிறது.

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டதால், கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.3,160 குறைந்துள்ளது. அதேபோல், கடந்த வாரம் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.100-ஐ எட்டிய நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு குறைந்துள்ளது.

திங்கள்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ.96-க்கு விற்பனையானது, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ரூ.3.50 குறைந்து, புதன்கிழமை 50 பைசா குறைந்து, ரூ.92-க்கு விற்பனையானது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஒரு கிராம் வெள்ளி மேலும் ரூ.3 குறைந்து, ரூ.89-க்கும், ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனையாகிறது.



https://newstamil.in/