Thursday, September 10, 2026
NEWS

TNPSC Annual Planner 2026 – ஆண்டு கால அட்டவணை வெளியீடு: குரூப் 4 தேர்வு டிசம்பர் 20 – முழு விவரம்

TNPSC 2026 ஆம் ஆண்டுக்கான ஆண்டு கால அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. அரசு வேலைக்கு தயாராகும் தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிடும் வகையில், ஆண்டுதோறும் Annual Planner வெளியிடும் நடைமுறையை இந்த ஆண்டும் டிஎன்பிஎஸ்சி தொடர்ந்துள்ளது.

இந்த ஆண்டுத் திட்டப்படிப்படையில், குரூப் 4 தேர்வு 2026 டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளில் பணியில் சேருவதற்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்த கால அட்டவணை இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி 2026 ஆண்டு கால அட்டவணை – முக்கியத் தேதிகள்

1. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – I (தொகுதி I பணிகள்)

  • அறிவிப்பு வெளியீடு: 23.06.2026
  • தேர்வு தேதி: 06.09.2026

2. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு

(பட்டயம் / தொழிற்பயிற்சி தரம்)**

  • அறிவிப்பு வெளியீடு: 07.07.2026
  • தேர்வு தேதி: 20.09.2026

3. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II

(தொகுதி II & IIA)**

  • அறிவிப்பு தேதி: 11.08.2026
  • தேர்வு தேதி: 25.10.2026

4. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு

(நேர்முகத் தேர்வு பணிகள்)**

  • அறிவிப்பு தேதி: 31.08.2026
  • தேர்வு தேதி: 14.11.2026

5. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (குரூப் 4)

  • அறிவிப்பு வெளியீடு: 06.10.2026
  • தேர்வு தேதி: 20.12.2026

முக்கிய குறிப்பு

இந்த ஆண்டு கால அட்டவணை தேர்வர்கள் முன்கூட்டியே படிப்புத்திட்டத்தை அமைத்துக்கொள்ள உதவும் வகையில் உத்தேசமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வுகள் சேர்க்கப்படவோ நீக்கப்படவோ செய்யப்படலாம்.
பணியிடங்களின் எண்ணிக்கை தனித்தனி அறிவிப்புகளில் வெளியிடப்படும்.
தேர்வுகள் தொடர்பான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் TNPSC இணையதளத்தில் (tnpsc.gov.in) மாற்றங்களுக்கு உட்பட்டு மேம்படுத்தப்படும்.
அதனால் தேர்வர்கள் இணையதளத்தை தொடர்ந்து கவனிப்பது அவசியம் என TNPSC அறிவுறுத்தியுள்ளது.