கல்லூரி மாணவிகளின் உள்ளாடைகளை கழட்டி ‘மாதவிடாய்’ சோதனை!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் பகுதியில் சுவாமி நாராயண் அறக்கட்டளை, ஷாகாஜ்ஆனந்த் பெண்கள் இன்ஸ்டியுட் ஒன்றை நடத்தி வருகிறது.

இது அங்குள்ள ஒரு கோவில் ட்ரஸ்ட் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த தொழில்பயிற்சி மையத்தில் பல மூடநம்பிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.

அதில் மிக முக்கியமான ஒன்று மாதவிடாய் நாட்களில் மாணவிகள் சக மாணவியரி தொட்டு பேசக்கூடாது மற்றும் எல்லோருடனும் அமர்ந்து உணவு உண்ணக் கூடாது போன்றவை. ஆனால் இவற்றை சில மாணவிகள் மீறியதாக நிர்வாகத்துக்குப் புகார் சென்றுள்ளது.

கடந்த 11 ஆம் தேதி உணவு இடைவேளையின் போது, விடுதிக்கு வந்த 60 மேற்பட்ட மாணவிகளின் உள்ளாடைகளை கழட்டி, அவர்களுக்கு மாதவிடாய் வந்ததா என பெண் ஊழியர்கள் சிலர் பரிசோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் மனஉளைச்சல் காரணமாக போராட்டம் நடத்தினர். இது சம்மந்தமாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து காவல்துறை தாமாக முன் வந்து விசாரணை செய்து வருகிறது.

சுவாமி நாராயண் அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/