Thursday, September 10, 2026
NEWS

டுவிட்டர் சமூக வலைதளங்களில் ரஜினி டிரெண்டிங்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் துக்ளக் பத்திரிக்கை விழா பேசிய கருத்துக்களை தற்போது எதிர்கட்சியினர் அரசியலாக்கி எதிர்த்து வருவதோடு ரஜினிக்கு மிரட்டல் விட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் ரஜினி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகியுள்ளன. #Rajinikanth, # மன்னிப்புகேட்கமுடியாது, #ரஜினிஒருமெண்டல், #ரஜினிகாந்த் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகியுள்ளன.

இதில் ஏராளமானோர் ரஜினிக்கு ஆதரவாகவும், புகழ்ந்தும், மற்றவர்கள் விமர்சித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Comments are closed.