பொங்கல் பரிசு ரூ.3,000 அறிவிப்பு! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 8 முதல் வழங்கல் – ரேஷன் கடை வேலை நாள் மாற்றம்
தமிழர் திருநாளான தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.3,000 ரொக்கம், மேலும் விலையில்லா வேட்டி – சேலை வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ரேஷன் கடை வேலை நாள் மாற்றம் பொங்கல் பரிசு வழங்கலை முன்னிட்டு,
- ஜனவரி 9 (வெள்ளிக்கிழமை) – ரேஷன் கடைகள் வேலை நாள்
- ஜனவரி 10 (சனிக்கிழமை) – ரேஷன் கடைகளுக்கு விடுமுறை
என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வழக்கமாக வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு விநியோக தேதி
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 8 முதல் தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது அருகிலுள்ள ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.
டோக்கன் விநியோகம்
பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன், தமிழக முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் ஒரு ரேஷன் கடையில் 500 பேருக்கு பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாருக்கு கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது?
- பொங்கல் பரிசு மற்றும் ரூ.3,000 ரொக்கம் கிடைப்பவர்கள்:
- அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள்
- இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள்
கிடைக்காதவர்கள்:
- சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள்
- ரேஷனில் எந்த பொருளும் வாங்காமல், அடையாள சான்றுக்காக மட்டும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள்
- மத்திய, மாநில அரசு ஊழியர்கள்
- பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் ஒரு பிரிவு
- வருமான வரி செலுத்துபவர்களின் ஒரு பிரிவு
தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் டோக்கனை தவறாமல் கொண்டு, ஜனவரி 8 முதல் ரேஷன் கடைகளில் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

