ஒரு தலை காதல்: 13 வயது சிறுமியின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது

சென்னை அமைந்தகரை, முத்துமாரி அம்மன் காலனி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வரும் 8 ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருதலைக் காதல் விவகாரத்தில் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிய இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்.

13 வயது சிறுமி நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து மாடியில் இருந்துள்ளார். அப்போது திடீரென அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்துள்ளனர் அப்போது நித்தியானந்தன் அந்தச் சிறுமியின் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டிருந்தார்.

அக்கம்பக்கத்தினர் வருவதைப் பார்த்துவிட்டு அவன் தப்பியோடிய நிலையில், கழுத்தில் ரத்தம் வடிந்தபடி துடித்துக்கொண்டிருந்த அந்த சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

நித்தியானந்தன் அந்தச் சிறுமியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளிவிட்டு வந்து மொட்டை மாடியில் தனியாக விளையாடிக்கொண்டு இருந்த அந்த சிறுமியிடம் காதலை சொல்ல சென்ற போது அந்த மாணவி காதலிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

அவர் சம்மதிக்காததால் மறைத்துவைத்திருந்த கத்தியைக் கொண்டு சிறுமியின் கழுத்தை அறுக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தப்பியோடிய நித்தியானந்தனை போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.



Comments are closed.

https://newstamil.in/