பெரும் சிக்கலில் திமுக அரசு! ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் திமுகவிற்கு எதிர்பார்க்காத திசையில் எல்லாம் இடி விழ தொடங்கி உள்ளது. முக்கியமாக முதல் 2 ஆண்டுகள் திமுக ஆட்சி மீது பெரிதாக விமர்சனங்கள் இல்லை. ஆனால் கடந்த ஒரு வருடங்களாக திமுக அரசு மீது சில விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

முக்கியமாக சட்ட ஒழுங்கு ரீதியாக ஆளும் திமுக மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக உள்ளூர் அளவில் கிரைம்கள் அதிகரிப்பதும் அரசு மீதான விமர்சனமாக மாறி உள்ளது.

உதாரணத்திற்கு, வண்டலூர் அருகே திமுக பிரமுகர் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. பூந்தமல்லியில் பரபரப்பு இந்து அமைப்பு மாநில தலைவர் வெட்டி படுகொலை, நெல்லை காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் தன்சிங் படுகொலை செய்யப்பட்டு கண்டுபிடிப்பு. சேலத்தில் அ தி மு க பிரமுகர் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை. சென்னை, திருவான்மியூர் – வழக்கறிஞர் வெட்டி படுகொலை.

இது தொடர்பாக ஸ்டாலினுக்கும் ரிப்போர்ட்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அரசு நிர்வாகம் ரீதியாக உருவான சொதப்பல்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

  1. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவரின் கொலை நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தேசிய அளவில் தலித் அமைப்புகள் இடையே கடுமையான எதிர்ப்புகளை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது.

  2. இந்த விவகாரத்தில் திருமா மிகவும் காட்டமாக பேசி உள்ளார். அதில், ‛நான் என் அன்பு இளவலை இழந்துள்ளேன். ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கோழைத்தனமானது. கடும் கண்டனத்துக்குரியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையை ஜனநாயக சக்திகள் கண்டித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக தலைவர்கள் கண்டித்துள்ளனர். 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்களை நேசித்தவர் ஆம்ஸ்ட்ராங். அம்பேத்கரின் கொள்கைகள், அரசியலமைப்பை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள். சாமானியன் முதல் தவைர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பது அரசின் கடமை, காவல்துறையின் கடமையாகும். இனிமேலாவது உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்; வரும் காலத்தில் இதுபோன்று நடக்க கூடாது. ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கோழைத்தனமானது. அவரது கொலையில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது தான் உண்மை என்று கூறி உள்ளார்.

  3. கள்ளச்சாராய மரணத்தின் எண்ணிக்கைக் கூடுவது திமுக அரசுக்குத் தீரா பழியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது முதன் முறையாக கடும் கோபத்தில் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 66 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அரசுக்கு பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது.

  4. எடப்பாடியின் எழுச்சிக்கு இது காரணம் ஆகி உள்ளது. எடப்பாடி ஆக்டிவ் அரசியலுக்கு வந்துள்ளார். போராட்டம், உண்ணாவிரதம் என்று மீண்டும் ஆக்டிவ் ஆகி உள்ளார்.

  5. தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் + அதிமுக + நாம் தமிழர் கூட்டணி உருவாகலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக நாம் தமிழரை கூட்டணிக்கு அழைக்கலாம். இதன் மூலம் திமுக கூட்டணிக்கு பதிலடி கொடுக்கலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் ரகசியமாக கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கிவிட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை உடைத்து தங்கள் பக்கம் கொண்டு வருவதே அவரின் திட்டம் என்கிறார்கள். முக்கியமாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுகளில் ஒன்றை குறிவைக்கிறார் விஜய் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்களை இழுக்க அதிமுக முயன்றது. ஆனால் அதிமுக எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் சேரலாம். அதனால் பாஜக மீதான அதிருப்தி காரணமாக அதிமுகவையும் இந்த கட்சிகள் புறக்கணித்தன. ஆனால் விஜய்க்கு அப்படி ஒரு பிம்பம் இல்லை. அவர் பாஜகவுடன் நெருக்கமாக இல்லை. பாஜக பக்கம் செல்ல வாய்ப்பு இல்லை. ஆனால் இவர்கள் விஜயுடன் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. சீமான் – விஜய் – எடப்பாடி – சொந்த கூட்டணி கட்சிகள் – அதிகாரிகள் என்று திமுகவை சுற்றி பெரிய சுழல் ஏற்பட்டு உள்ளது. அதை திமுக எப்படி சமாளிக்கும் என்பதைதான் பார்க்க வேண்டும்.

  6. சீமான் – விஜய் – அதிமுக என்ற கூட்டணி நெருக்கம் ஆகி உள்ளது. முதல் விஷயம் ஆளும் திமுகவிற்கு எதிராக அதிகார்பூர்வமற்ற முக்கோண கூட்டணி உருவாகி உள்ளது. அது நாம் தமிழர் – அதிமுக – விஜய் கூட்டணி. இதில் நாம் தமிழர் – அதிமுக – விஜய் மூன்று பேருக்கும் நல்ல வலுவான ஐடி விங் உள்ளது. ஒன்று ரசிகர் மற்ற ஐடி விங். மற்ற இரண்டு அரசியல் ஐடி விங். இதில் விஜய் ஐடி டீம் ஏற்கனவே பல மோசமான சண்டைகளை பார்த்த டீம். எளிதாக டிரெண்டிங் செய்து பழக்கப்பட்ட டீம்.

  7. உட்கட்சி மோதல்: திருநெல்வேலி மேயர் பி.எம்.சரவணன் மற்றும் கோயம்புத்தூர் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை அந்தந்த மாநகராட்சி ஆணையர்களிடம் புதன்கிழமை அளித்தனர். இரு தலைவர்களும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். திருநெல்வேலியில், 2022ல், கவுன்சிலர்கள் பொறுப்பேற்றதில் இருந்தே, உள்ளாட்சிக்குள் உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. மேயர் சரவணன், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் முட்டுக்கட்டை போடுவதாக, தி.மு.க.,வினர் மீது, பல புகார்கள் குவிந்தன 2023 டிசம்பரில் திமுக கவுன்சிலர்கள் தங்கள் சொந்த மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே, தி.மு.க., கவுன்சிலர்களை சிலர் அருகில் உள்ள ஓட்டல்களுக்கு கூட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கடந்த ஜனவரி 12ம் தேதி எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தீர்மானத்தை புறக்கணித்ததால் அது தோல்வியடைந்தது. ஆனால், மேயர் மீது தி.மு.க., கவுன்சிலர்கள் மத்தியில் கடும் கோபமும், விரக்தியும் நிலவியது.

இதுபோல் எடப்பாடி உண்ணாவிரதம் போராட்டம், கள்ளச்சாராயம் மரணம், விஜய் புதிய கட்சி, அண்ணாமலையின் ஆக்ரோஷ தாக்குதல், இப்படி எல்லா பக்கமும் திமுகவிற்கும் ஸ்டாலினுக்கும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.



https://newstamil.in/