அந்தரங்க வீடியோ லீக்; 16 வயது சிறுமி தற்கொலை!

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சரநகர் பகுதியில் 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காதலனுடனான நெருக்கமான விடியோ கசிந்ததால் 16 வயது சிறுமி அவரது வீட்டின் கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சரநகர் பகுதியில் 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமியும் அவரது காதலனும் ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் நெருக்கத்துடன் இருக்கும் காட்சியை விடியோ எடுத்துள்ளனர். ஆனால் காதலன் அதை தனது நண்பர்களுக்கு கசியவிட்டுள்ளார். அந்த விடியோவை பார்த்த அவரது நண்பர்கள் மற்றவர்களுக்கு கசியவிட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பிப்ரவரி 29 ஆம் தேதி காவல்நிலையத்தில் சிறுமியின் காதலன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் மனச்சோர்வுடன் இருந்துவந்த சிறுமி, திங்கள்கிழமை மாலை தனது வீட்டின் கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சர்தார்நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமந்த் படேல் கூறினார்.

சிறுமியின் காதலன் மீது உள்பட 4 பேர் மீது போக்ஸோசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


13 thoughts on “அந்தரங்க வீடியோ லீக்; 16 வயது சிறுமி தற்கொலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *