இண்டிகோ முக்கிய அறிவிப்பு – பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ. 10,000 பயணக் கூப்பன்!
இண்டிகோ நிறுவனம் விமான சேவை ரத்து மற்றும் தாமதத்தால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ. 10,000 மதிப்புள்ள பயணக் கூப்பன் வழங்கும் என்று அறிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 3, 4 மற்றும் 5 தேதிகளில் விமானம் ரத்து அல்லது தாமதம் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகள் இந்த பயணக் கூப்பனைப் பெறுவர். இண்டிகோ அறிவிப்பில் கூறியதாவது, டிஜிசிஏ விதிமுறைகளின் கீழ் ஏற்கனவே திருப்பி வழங்கப்பட வேண்டிய தொகையை, இந்த ரூ. 10,000 பயணக் கூப்பனுடன் சேர்த்து வழங்கப்படும்.
இந்த பயணக் கூப்பன் அடுத்த 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். 24 மணி நேரத்திற்கு குறைவாக ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான இழப்பீடு, பயணியின் பயண நேரத்தின் அடிப்படையில் ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை வழங்கப்படும்.
இண்டிகோ நிறுவனம், விமான சேவைகள் தாமதத்தால் பயணிகள் அனுபவித்துள்ள அவதி மற்றும் சங்கடங்களை ஒப்புக்கொண்டு, பயணிகளுக்கு இதனை சமாளிக்கும் புதிய முயற்சிகளை எடுத்துள்ளது.
